ரூ.401 கோடி செலவில் விமான நிலையம் : பிரதமர் மோடி திறந்து வைத்தார்
 

airport1

ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் தியோகர் விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

657 ஏக்கர் பரப்பளவில் 401 கோடி ரூபாய் செலவில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. 

தியோகர் விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி 2018-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி அடிக்கல் நாட்டினார். 

இந்த புதிய விமான நிலையத்தில் இருந்து தியோகர்- கொல்கத்தா இண்டிகோ விமானத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விமான நிலையத்தில், 2500 மீட்டர் நீள ஓடுபாதை உள்ளது. 

இது ஏர்பஸ் ஏ320 விமானங்கள் தரையிறங்குவதையும், புறப்படுவதையும் கையாளும். 

விமான நிலைய தொடக்க விழாவில் கலந்துக்கொண்ட சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், 

'தியோகர் விமான நிலையம் வரும் நாட்களில் ராஞ்சி, பாட்னா மற்றும் டெல்லியுடன் இணைக்கப்படும்' என்றார். 

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது :

ஜார்கண்ட் மட்டுமின்றி, இந்த திட்டங்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளுக்கும் பயனளிக்கும். 

தியோகர் விமான நிலையம் தங்களின் நீண்ட கால கனவு . அது இப்போது நிறைவேறியுள்ளது. இந்த திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். 

16,800 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் மாநிலத்தின் இணைப்பு, சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்தும்' என்றார்.
*

Share this story