அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
 

narendra

* இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதசேம் 1950ல் இந்நாளில் உருவாக்கப்பட்டது.

இது முந்தைய ஐக்கிய மாகாணங்களின் கீழ் வந்த பகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் உருவான நாளான இன்று மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், கடந்த சில ஆண்டுகளில் அதன் முன்னேற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநில மக்கள் பல்வேறு துறைகளில் முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாகவும், நாட்டின் வளர்ச்சியில் மதிப்புமிக்க பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

* 'பரம்வீர் சக்ரா' விருது பெற்ற 21 பேரின் பெயர்களை அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு பிரதமர் மோடி சூட்டினார். காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பெயர் சூட்டினார்.

அவர்களில், முதலாவதாக விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா மற்றும் மேஜர் தன்சிங் தாபா உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கும். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரில் இறந்த 'மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் பெயரும் ஒரு தீவுக்கு' சூட்டப்பட்டது.

அந்தமானில் உள்ள ரோஸ் தீவில் (2018-ம் ஆண்டு நேதாஜி பெயர் சூட்டப்பட்டது) நேதாஜி நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. அதில், அருங்காட்சியகம், ரோப்கார் வசதி, ஒலி-ஒளி காட்சி, குழந்தைகள் கேளிக்கை பூங்கா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறுகின்றன. இந்த நினைவு மண்டபத்தின் மாதிரி வடிவத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
 

Share this story