பாபர் மசூதி இடிப்பு விவகாரம் : வழக்குகளை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்

babar

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி கரசேவர்களால் இடிக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி லக்னோ சிறப்பு கோர்ட்டு விடுவித்து தீர்ப்பளித்தது.

அயோத்தி வழக்கில் 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் அரசு மற்றும் அரசு அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அவமதிப்பு வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டு இன்று முடித்து வைத்தது.

2019-ல் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துவிட்ட நிலையில் மீண்டும் விசாரிக்க தேவையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறி அவமதிப்பு வழக்குகளை முடித்து வைத்தனர்.

Share this story