யூ டியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
Dec 21, 2022, 00:36 IST

ஓராண்டில் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், நூற்றுக்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை முடக்கியதைத் தொடர்ந்து, மத்திய அரசின் உண்மை சரிபார்ப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் அதிகளவிலான தவறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக 3 யூ டியூப் சேனல்களை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
சுமார் 33 லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட இந்த யூடியூப் சேனல்களில் பதிவிடப்பட்ட வீடியோக்கள் அனைத்தும் தவறான தகவல்களைக் கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டது. சுப்ரீம்கோர்ட்டு, இந்திய தலைமை நீதிபதி, அரசு திட்டங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவை தொடர்பாக இந்த யூடியூப் சேனல்கள் தவறான தகவல்களை பரப்பியுள்ளன.
தகவல்களை பரப்புவது, வீடியோக்களில் விளம்பரங்கள் செய்வது ஆகியவற்றில் வருமானம் ஈட்டியதும் தெரிய வந்துள்ளது.