அணையில் மிதந்து கிடந்த 3 பெண்களின் சடலங்கள்; நடந்தது என்ன?  போலீஸ் விசாரணை

By 
saprar

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சியில் உள்ள சப்ரார் அணையில் 3 பெண்களின் சடலங்கள் மிதந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அணையில் சடலங்கள் மிதப்பதாக மௌரானிபூரின் நீர்ப்பாசனத் துறை ஊழியரிடம் இருந்து போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அணையில் மிதந்து வந்த 3சடலங்களை மீட்டனர்.

இவர்கள் 18 முதல் 20 மற்றும் 25 வயது மதிக்கத்தக்க பெண்களின் சடலங்கள் என்றும் மத்தியப் பிரதேசத்தின் எல்லையில் உள்ள திகாம்கர் மாவட்டத்தில் இருந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததை அடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this story