பஸ் கவிழ்ந்து விபத்து; 6 பேர் பரிதாப பலி : பிரதமர் மோடி இரங்கல்

busa

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் 50 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரிதி மாவட்டத்தில் இருந்து ராஞ்சி நோக்கிச் சென்ற பஸ், தடிஜாரியா காவல் நிலையப் பகுதியில் உள்ள சிவன்னே ஆற்றில் உள்ள பாலத்தின் தடுப்பு பகுதியை உடைத்துக் கொண்டு கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் ஹசாரிபாக்கில் உள்ள சதார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

Share this story