ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற பேருந்து விபத்து : 11 பேர் பலி
 

accident

வங்காளதேசம், சிட்டகாங் மாவட்டத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற மினி பஸ் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. 

ரயிலில் சிக்கிய பஸ் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். 

மினி பஸ்சில் பயணம் செய்தவர்கள், அமன் பஜார் பகுதியில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவார்கள். 

இவர்கள் மிர்ஷாராய் மலைப் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது விபத்தில் சிக்கி கொண்டனர். 

உயிரிழந்தவர்களில் ஏழு மாணவர்களும், நான்கு ஆசிரியர்களும் உள்ளடங்குவர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டு மாலையில் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக சிட்டகாங் தீயணைப்புப் பிரிவு ஆலுவலகத்தின் துணை இயக்குநர் அனிசுர் ரஹ்மான் தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே கேட்மேன் கைது செய்யப்பட்டார்.
*

Share this story