மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி : முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..

chess,m.k

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடக்கிறது.

இதுதொடர்பாக, இன்று காலை 11.30 மணி அளவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "செஸ் ஒலிம்பியாட்" போட்டிக்காக, மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். 

அவர் போட்டி நடை பெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்க்கு சென்று அங்குள்ள வளாகத்தில் அமைக்கப்படும் புதிய அரங்கத்தை பார்வையிட்டார். மேலும் போட்டி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தார். 

இதைத்தொடர்ந்து அங்குள்ள அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பு குழுவுடன் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்ய நாதன், தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.
*

Share this story