சென்னையில், ஒப்பந்த ஆசிரியை தற்கொலை : போலீஸ் விசாரணை

sui

சென்னை மாங்காட்டில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பியூலா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதே பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியை தரக்குறைவாக பேசியதால் பியூலா தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பள்ளிக்கு விரைந்த பியூலாவின் உறவினர்கள் பள்ளி வளாகத்தில் பெண் ஆசிரியை அடிக்க பாய்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆசிரியை மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்து சென்று மாங்காட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Share this story