தமிழகத்தில் கொரோனா தொற்று நிலவரம் : சுகாதாரத்துறை தகவல்

By 
radhakrishnan health secretary

சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,' ஜனவரியில் உச்சத்தை அடைந்து, அதிகரித்த கொரோனா தற்போது குறைந்து கொண்டே வந்தாலும், முகவசம் அணிவதை நிறுத்தக் கூடாது.

மக்கள் கவனக்குறைவாக இருந்தால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும். மேலும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தொற்றுப் பாதிப்பு 10 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

மற்ற மாவட்டங்களில் தொற்றுப் பாதிப்பு விகிதம் குறைந்து இருந்தாலும், கேரள எல்லையான கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில், ஆந்திரா எல்லையான திருவள்ளூர் மாவட்டம் மற்றும், சுற்றுலா தளம் உள்ள நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது 4 சதவீத படுக்கைகள் மட்டுமே நிரம்பி உள்ளது. அதுமட்டுமின்றி, ஜனவரியில் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் ஏழரை லட்சம் பேர் என்கிற நிலையில், தற்போது 4 லட்சத்திற்கும் அதிகாமானோருக்கு தமிழகத்தில் பூஸ்டர் செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காலத்தில், புற்றுநோய் போன்ற இதர நோய்களை பொதுமக்கள் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் பாதத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதில் 2012-ம் ஆண்டு 53,022 பேருக்கு புற்று நோய் பாதித்தது, இந்நிலை 2021-ம் ஆண்டு 81,814 ஆக உயர்ந்துள்ளது. 

அதில், கடந்த ஆண்டு மட்டும் 55 விழுக்காடு பெண்களும், 45 விழுக்காடு ஆண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு பெரும்பாலும் வாய்புற்று, நுரையீரல், வயிற்று புற்றுநோய் அதிகம் பாதிக்கப்படுகிறது.

பெண்களுக்கு அதிகமாக கர்பப்பை வாய் மற்றும் மார்பக புற்று நோய் அதிகமாக உள்ளது. 

இதனால், ஆரம்ப காலத்தில் சிகிச்சைக்கு வந்தால் 75 சதவீதம் வரை குணப்படுத்த முடியும். கவரப்பேட்டையில் புற்றுநோய் சிகிச்சைக்கு ரூ.200 கோடி மதிப்பில் ஒப்புயிர் மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதனால், தொற்றா நோய் குறித்த தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இன்னுயிர் காப்போம் திட்டம் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜனவரியில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதற்கு இன்னுயிர் காப்போம் திட்டம் பெரும் பங்கு உண்டு. இத்திட்டத்தின் மூலம், 11,024 பேரும் 84 சதவீத அரசு மருத்துவமனையில், தனியார் மருத்துவமனையில் 2,064 பேரும் என 48 மணி நேரத்தில் 13,268 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக 12.61 கோடி நிதியுதவி பெற்று உள்ளனர்.

2-ம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 1.06 கோடி பேர் உள்ளது வேதனை அளிக்கிறது. 

இதனால், தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.

Share this story