மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டம் : தமிழக கல்வித்துறை ஏற்பாடு

By 
students4

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

3-வது மண்டலமாக இன்று திருப்பூரில் பள்ளிக்கல்வி துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 

மாணவ மாணவிகளின் நலன் கருதி அரசாங்கம் கூறியுள்ள திட்டங்களை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என பள்ளி கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

மன அழுத்தத்தின் காரணமாக மாணவ செல்வங்கள் விபரீதமான முடிவை எடுக்கின்றனர். 

அவர்களை விளையாட்டு துறைகளின் மீது கவனத்தை செலுத்த வைப்பதன் மூலம், அவர்களுக்கு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும். நடக்க கூடாத சோக நிகழ்வு கள்ளக்குறிச்சியில் நடந்துள்ளது. 

குழந்தைகள் முழுமையாக தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். 

இது போன்ற சம்பவங்களில், காரணகர்த்தா யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் எளிதாக இதில் இருந்து தப்பிவிட முடியாது. 

ஒவ்வொரு ஒன்றியத்திலும் 2 மருத்துவர்கள் என நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது' என்றார்.
*

Share this story