ஸ்டிக்கர் ஒட்டுதலுக்கு தடை : காவலர்களுக்கு, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..
Tue, 19 Jul 2022

தமிழக காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல், அதிகாரிகள் வரை தங்களது சொந்த வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கரை ஒட்டி இருப்பார்கள்.
இதற்கு தடைவிதித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது :
காவல் துறையில் அரசு வாகனங்களில் மட்டுமே போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டி பயன்படுத்த வேண்டும்.
காவலர்களின் தனி நபர் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர்களை ஒட்டக் கூடாது.
இந்த உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மண்டல ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
*