ஜிஎஸ்டி வரி குறித்து, தவறான தகவல் பரப்ப வேண்டாம் : நிர்மலா சீதாராமன் விளக்கம்

nirmala1

ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், 'சில்லறை விற்பனையில் வழங்கப்படும் உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். 

மேலும், இது எந்தெந்த உணவுப் பொருள்களுக்கு பொருந்தும் எனவும் பட்டியலிட்டுள்ளார். 

அதன்படி, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, கோதுமை மாவு, ஓட்ஸ், தயிர் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

அரிசி, கோதுமை மீதான ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் எனவும் லேபிள் ஒட்டி விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது மட்டுமே 5% ஜிஎஸ்டி வரி நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். 

லேபிள் இன்றி சில்லறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு எந்தவித ஜிஎஸ்டி வரியும் இல்லை எனவும் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
*

Share this story