கலெக்டர் ஆபீஸ் முன்பு, விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்..

far

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, வேலைவாய்ப்பை வழங்க வேண்டும், விவசாயிகளுக்கான லாபகரமான விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக முன்பு சாலையில் அரை நிர்வாணத்துடன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கலைந்து போக சொல்லியும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் அமர்ந்திருந்தனர்.

அப்போது அலுவலகத்திற்கு வந்த கலெக்டர் பிரதீப் குமார் தன் காரிலிருந்து இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் சாலையில் நின்று கொண்டு நாம் பேச வேண்டாம், அலுவலகத்திற்குள் செல்லலாம் என விவசாயிகளை அழைத்தார். அதற்கு ஒப்புக்கொண்ட விவசாயிகள் அலுவலகத்திற்குள் செல்ல தயாராகினர்.

அப்போது மாவட்ட கலெக்டரை அழைத்துக் கொள்ள அவர் அருகில் அவரின் கார் வந்தது. ஆனால் ஆட்சியர் பிரதீப் குமார் காரில் ஏறாமல் விவசாயிகளை அழைத்து கொண்டு அவரும் சேர்ந்தே தன் அலுவலகத்திற்கு நடந்து சென்றார்.
 

Share this story