17 காளைகளை பிடித்த வீரருக்கு முதல் பரிசு : எங்கே தெரியுமா? 

By 
jallikattu5

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

போட்டியின் முடிவில் மொத்தம் 485 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 17 காளைகளை பிடித்த திருநல்லூர் யோகேஸ்வரன் என்பவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல் பரிசான பைக் வழங்கப்பட்டது.

இதேபோன்று, தஞ்சை மருதகுடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பைக் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில் 3 போலீசார் உட்பட மொத்தம் 70 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 12 பேர் பலத்த காயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டன.
 

Share this story