ஹெலிகாப்டர் விபத்து : அமைச்சர் உள்பட 16 பேர் பலி
Wed, 18 Jan 2023

உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உக்ரைனின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைனின் அவசர சேவைக்கு சொந்தமான இந்த ஹெலிகாப்டர் உள்துறை அமைச்சர் டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 8 பேர் பயணம் செய்த நிலையில் விபத்துக்குள்ளானது.
மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இவர்களை தவிர, 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 10 பேர் குழந்தைகள் என தேசிய தலைமை காவலர் இஹோர் கிளிமென்கோ தெரிவித்துள்ளார்.