பலமுறை எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளது : ஜக்கி வாசுதேவ்

By 
isha

கர்நாடக மாநிலம் மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ மற்றும் மங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் தனது வாட்ஸ்அப்பில் டி.பி.யாக கோவை வெள்ளிங்கிரி அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் ஆதியோகி சிலையை வைத்திருந்தான்.

மேலும் அதில் பிரேம்ராஜ் என்ற பெயரையும் பதிவிட்டிருந்தான். இதனால் ஷாரிக் ஈஷா யோகா மையம் சென்றானா? என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கோவை தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஷாரிக் ஈஷா யோகா மையத்திற்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஷாரிக்கின் பயங்கரவாத தாக்குதல் பட்டியலில் சுற்றுலா மையமான ஈஷா யோகா மையமும் இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஷாரிக், ஆதியோகி சிலையை வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்திருந்தது குறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட ஷாரிக், ஆதியோகி சிலையை டிபியாக வைத்துள்ளார். அவர் ஆதியோகி மீதான பற்றின் காரணமாக வைக்கவில்லை. அவருடைய மத அடையாளத்தை மறைப்பதற்காகவே ஆதியோகி புகைப்படத்தை டி.பி.யாக வைத்துள்ளார்.

மிரட்டல்கள் என்பது எனக்கு புதிது அல்ல. எனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் எண்ணிலடங்கா மிரட்டல்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்வதில்லை. நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story