சென்னையில், அனைவரையும் கவரும் தீவுத்திடல் : பொருட்காட்சி..

By 
exhibition

அரசின் மக்கள் நலதிட்டங்களை மக்கள் எளிதில் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் அரசின் பல்வேறு துறைசார்ந்த காட்சி அரங்கங்கள் கண்ணை கவரும் வகையிலும், சிந்தனையை தூண்டும் வகையிலும் இடம்பெற்றுள்ளன. இத்தனை துறைகள் இவ்வளவு நல்ல காரியங்களை மக்களுக்கு செய்கிறதா என்பதை தெரிந்துகொள்ளவும் முடியும்.

60 தனியார் அரங்குகள், 125 கடைகள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள சிறப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் பல பகுதிகளிலும் கிடக்கும் பலவகையான பொருட்களை பார்க்கவும் முடியும், வாங்கவும் முடியும். பார்த்து மகிழ நல்ல வாய்ப்பு.

தமிழ்நாட்டின் சிறந்த கலாச்சாரம், கலை, கட்டிடக்கலை, பாரம்பரியம், கைவினைப்பொருட்கள், உணவு வகைகள் மற்றும் பிற சிறப்பம்சங்கள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தி உள்ளார்கள். சுகாதாரத்துறை கொரோனாவை வென்றதை அதன் வடிவத்துடன் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அதன் கீழ் சித்த மருத்துவத்துறை சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மூலிகைச்செடிகளை அதன் பெயர்களுடன் வைத்துள்ளார்கள். இதை வீடுகளிலும் வளர்த்து பயன்பெற முடியும் என்று விளக்கப்படுகிறது.

சென்னையின் அடையாளத்தை மாற்றிய மெட்ரோ ரயில் திட்ட காட்சிகளும் கவர்கிறது. இவைகளை கடந்து மறுபக்கம் சென்றால் சூடான பஜ்ஜி, விதவிதமான நொறுக்கு தீனிகளை வாங்கி ருசிக்கலாம். 

சுழலும் ராட்சத ராட்டினங்கள், சாகச விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள், சிறுவர் ரயில், பனிக்கட்டி உலகம், மீன்காட்சியகம், பேய்வீடு என ஒவ்வொன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

ஆடி, அமர அமர்ந்து பார்த்து ரசிக்க 3டி காட்சி தியேட்டர், ஓட்டல் என ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் ரசனைக்கும் தீனிபோடும் வகையில் இடம்பெற்றுள்ளது. பொழுது போகுமா என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தவர்கள். எல்லாவற்றையும் பார்க்க முடியவில்லை. மீண்டும் ஒருநாள் வரவேண்டும் என்று மீண்டும் மீண்டும் வரவழைக்கும். காரிலேயே அமர்ந்து உண்டு மகிழலாம்.

தமிழகத்தின் மிக முக்கியமான அடையாளங்களான மகாபலிபுரம் சிற்பம், வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை ஆகிய சிற்பங்கள் 3-ன் வழியாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. நிஜத்திலும் தமிழ்நாட்டுக்குள் நுழைந்து தமிழ்நாட்டையே பார்த்து ரசித்து மகிழ்ந்த உணர்வோடு திரும்பலாம்.

Share this story