இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே நீக்கம்; அதிபர் ஒப்புதல்..

sri lanka

இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அத்தியாவசிய பொருட்கள், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் உள்ளிட்டவை விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பொதுமக்கள், தொழிற்சங்கங்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்க மறுத்த மகிந்த ராஜபக்‌ஷே தான் பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், தற்போது மகிந்த ராஜபக்‌ஷேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, புதிய பிரதமரை நியமிக்க அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷே ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் அமைத்த புதிய அமைச்சரவைக்கு உதவுவதற்காக, தேசிய சபை ஒன்றையும் நியமிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
*

Share this story