தமிழகத்தில், 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

leave

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய உள்ளதால் தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் 14-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கன மழை பெய்து வருகிறது. 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 

கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை தொடர்பான அறிவிப்பை கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர். 

மேலும் அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், நீலகிரி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருச்சி, பெரம்பலூர், சேலம், கரூர், தஞ்சாவூர் திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Share this story