சீனாவின் செயல்பாடுகள் குறித்து, இந்திய கடற்படை தலைமை தளபதி பேட்டி

navy

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கடற்படை தலைமை தளபதி அட்மிரல் ஆர். ஹரி குமார் கூறியுள்ளதாவது:

இந்திய பெருங்கடல் பகுதியில் நடக்கும் அனைத்து முன்னேற்றங்களையும் இந்திய கடற்படை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் பல சீனக் கப்பல்கள் இயங்குகின்றன 4 முதல் 6 வரை சீன கடற்படைக் கப்பல்கள் மற்றும் சில உளவு கப்பல்கள் இயங்குகின்றன.

சீன மீன்பிடிக் கப்பல்களும் இயங்குகின்றன. நாங்கள் அனைத்து முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்திய பெருங்கடல் பகுதி இது ஒரு முக்கியமான பகுதி என்பதை நாங்கள் அறிவோம், அங்கு அதிக அளவு வர்த்தகம் நடைபெறுகிறது.

கடல்சார் துறையில் இந்தியாவின் நலன்களைக் கவனிப்பதே எங்கள் வேலை. நம்பகமான பாதுகாப்பை வழங்குவதே எந்தவொரு ஆயுதப்படையினரின் பணியாகும். இந்தியா அதன் பாதுகாப்பு தேவைக்காக தொடர்ந்து பிற நாடுகளை சாரந்து இருக்க முடியாது.

சமீபத்திய உலகளாவிய நிகழ்வுகள் நாம் மற்றவர்களைச் சார்ந்து இருக்க முடியாது என்பதை காட்டுகிறது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அரசு எங்களுக்கு மிகத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 2047ம் ஆண்டிற்குள் இந்திய கடற்படையை தற்சார்பு கடற்படையாக மாற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this story