இந்தியாவின் முதல் ட்ரோன் போக்குவரத்து திட்டம் தொடங்கியது..

first

மருத்துவமனைகளில் விரைவான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவும் வகையில் மனித உறுப்புகளை ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் இந்தியாவின் முதல் முன்மாதிரி திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

தற்போது விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக எடுத்துச் செல்லும் முறைக்கு மாறாக, விமான நிலையத்திலிருந்து பதப்படுத்தப்பட்ட மனித உறுப்புகளை சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ட்ரோன்களை பயன்படுத்துவது மூலம் போக்குவரத்து நேரத்தை கணிசமாக குறைக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. ட்ரோன் திட்டத்தை தொடங்கி வைத்து பிறகு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:-

வேகம் மற்றும் தடையற்ற போக்குவரத்து ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதன் மூலம், உறுப்புகளை எடுத்துச் செல்வதற்கான தளவாடங்களில் விரைவில் புதுமை தேவைப்படும்.

அதில் வரவேற்கத்தக்க பரிந்துரைகளில் ஒன்றுதான் ட்ரோன்களைப் பயன்படுத்துவது. போக்குவரத்து சிக்கலைத் தீர்க்க இது மிகவும் புதுமையான அணுகுமுறையாகும். இந்த திட்டத்தில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மருத்துவமனை ஒரு பகுதியாக இருப்பதை நான் பாராட்டுகிறேன்.

இந்த சாதனை பெருமையை மட்டுமல்ல, சுகாதாரத் துறையில் ஒரு புதிய அளவுகோலை உருவாக்குகிறோம் என்ற திருப்தியையும் தருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Share this story