காதல் அமர்க்களம் : துப்புரவு தொழிலாளியை திருமணம் செய்த பெண் டாக்டர்; வைரலாகும் நிகழ்வு..

female

பாகிஸ்தானில் ஆஸ்பத்திரி ஒன்றில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணிபுரிந்த ஒருவரை, அதே ஆஸ்பத்திரியில் டாகடராக பணிபுரியும் ஒரு பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ஜோடி தற்போது இணையத்தில் வைரலாகி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

பாகிஸ்தானில் கிஷ்வர் சாஹீபா என்ற பெண் டாக்டர் தெஹ்சில் ஒகாரா மாநிலத்திலுள்ள திபால்பூரில் வசித்து வருகிறார் அவர் அங்கேயே ஆஸ்பத்திரில் ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார். அங்கு அறையை சுத்தம் செய்யும் தொழிலாளியாக வேலைப்பார்த்தவர் ஷசாத். அவரின் எளிமையான குண நடவடிக்கையைக் கண்டு அவர் மேல் காதல் கொண்டுள்ளார் கிஷ்வர் சாஹீபா.

முதன் முதலில் கிஷ்வர் தான் ஷசாத்திடம் காதலைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷாசாத் கேட்டபோது, நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை. கிஸ்வர் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. நான் அந்த ஆஸ்பத்திரில் உள்ள அறைகளைச் சுத்தம் செய்து கொண்டும் அங்குள்ள டாக்டர்களுக்கு டீ பரிமாறும் சேவை செய்து கொண்டும் இருந்தேன்.

ஒரு நாள் என்னை அணுகிய கிஸ்வர் நான் இல்லாத நேரங்களில் என்னைத் தொடர்பு கொள்வதற்காக என்னுடைய மொபைல் நம்பரை கேட்டார். Also Read - சீனாவில் கடுமையான கொரோனா ஊரடங்கு; உணவு, மருத்துவ உதவி பெற கையேந்தும் சூழலுக்கு தள்ளப்பட்ட மக்கள் நானும் அவருக்கு என் மொபைல் நம்பரை கொடுத்தேன்.

அதன் பிறகு நான் என்னுடைய வாட்ஸ் அப்பில் ஒரு ஸ்டேட்டஸ் போட, அதற்கு லைக் எமோஜி அனுப்பி இருந்தார் கிஸ்வர். அதன் பிறகு அன்றைய நாளின் பிற்பகுதியில் என்னை அவருடைய ரூமிற்கு அழைத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இது நான் சற்றும் எதிர்பாராததாகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருந்தது. என்னாலேயே நடப்பதை நம்ப முடியவில்லை.

அதன்பிறகு சில நாட்கள் நான் மருத்துவமனைக்கு வரவில்லை. உண்மையில் அந்த இடைப்பட்ட நாட்களில் எனக்குப் பயத்தினால் காய்ச்சல் ஏற்பட்டது என்பதை அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார். அதன் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டு திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு அந்த ஆஸ்பத்திரியில் இருந்து கிஸ்வர் வெளியேறிவிட்டார்.

தற்போது அவர்கள் அதே ஊரிலேயே கிஸ்வருக்காக ஒரு கிளினிக் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் இந்த ஜோடி தங்களுக்கு என ஒரு யூடியூப் சேனலை உருவாக்கிக் கொண்டு அதில் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றிய பல முக்கிய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

டாக்டர் கிஷ்வர் சாஹிபா கூறியதாவது:-

ஷசாத்தை முதன்முதலில் சந்தித்தபோது, அவர் ஒரு ஒரு சுகாதாரப் பணியாளராகத் தோன்றவில்லை அவர் சொந்தமாகத் தொழில் செய்து வருவதையும் எளிமையாக இருப்பதையும் அறிந்து ஆச்சரியப்பட்டேன்.

ஷசாத்துடன் அற்புதமான திருமணவாய்ப்பை இழக்க விரும்பாததால் நான் ஷசாத்திடம் காதலை வெளிப்படுத்தினேன் என கூறினார்.

Share this story