காதல் படுத்தும் பாடு : விமான கழிவறையில், தற்கொலைக்கு முயன்ற காதலி..

love3

பக்ரைன் நாட்டில் இருந்து கடந்த சனிக்கிழமை அதிகாலை டெல்லிக்கு பயணிகள் விமானம் வந்தது.

அந்த பயணிகள் விமானத்தில் வந்த 29 வயதான சீன பயணி விமான நிலையத்தின் கழிவறையில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரேசர் கத்தியால் தனது கழுத்தை அறுத்த அந்த சீன பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்து சென்ற அதிகாரிகள் சீன பெண்ணை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அந்த பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ள நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் சீன பெண் தனது வேலையை இழந்ததாலும், தனது காதலன் காதலை முறித்துக்கொண்டதாலும் அந்த சீனப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story