எம்.எஸ்.எம்.இ. பற்றி பொதுமக்கள் அறிந்து கொள்ள, பஸ் யாத்திரை வருகிறது..
 

scheme

சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு, எனும் மண்டல மாநாடு திருப்பூரில் நடந்தது.

இதில் தமிழக முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொண்டார்.

அந்த வகையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பொருளாதார சட்டத்திற்கு உட்பட்டு இருக்கும் வகையில், இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுண்ட் இந்தியா (இந்திய பட்டைய கணக்காளர்கள்) என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து, இந்திய பட்டைய கணக்காளர்கள் குழும நிர்வாகி ராஜேந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்திய பட்டைய கணக்காளர்கள் குழுமம் நாடு முழுவதும் 165 கிளைகளை கொண்டுள்ளது.

நாங்கள் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சுமைகளை குறைக்க பாடுபடுகிறோம். மேலும் அரசுக்கு தேவையான அனைத்து பணிகளையும் நாங்கள் செய்து வருகிறோம். தற்பொழுது இந்த நிகழ்வில் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எங்களால் செய்ய இயலும்.

மேலும் எம்.எஸ்.எம்.இ.குறித்து அனைத்து மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் பஸ் யாத்திரை ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இந்த யாத்திரை கடந்த ஆகஸ்ட் 18ந் தேதி மும்பையில் தொடங்கியது.

வரும் நவம்பர் 3-ந் தேதி தமிழகத்திற்கு இந்தப் பேருந்து வருகிறது .இதனை குறு சிறு நடுத்தர தொழில் துறை நிறுவன அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார். என்றும் அரசோடு நாங்கள் இருப்போம்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் நாங்கள் மேற்கொள்ள இருக்கும் முதல் கட்ட பணியாக அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் பயிற்சி வழங்கும் பொருட்டு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story