மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை : விண்ணப்பிக்க, மேலும் 2 நாள் அவகாசம்

1000

அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. 

இத்திட்டத்தில் இதுவரையில் சுமார் 4 லட்சம் மாணவிகள் சேர்ந்துள்ளனர். 

கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு அடுத்த மாதம் முதல் இத்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

இந்த நிலையில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்குதல், வங்கி கணக்கு விவரங்களில் திருத்தம் இருப்பின் அதனை மேற்கொள்ளுதல், 

புதிதாக வங்கி கணக்கு தொடங்குதல் போன்ற காரணங்களுக்காக அவகாசம் கொடுத்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
*

Share this story