ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்கப்படும் : அமித்ஷா தகவல் 

By 
nia

* கோவை குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார். கோவை சம்பவம் போன்று வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க காவல்துறையில் சிறப்பு படை உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

* அரியானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எல்லை தாண்டிய குற்றங்களைத் திறம்பட கையாளுவது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு ஆகும். 2019-ம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீருக்கு ரூ.57,000 கோடி முதலீடு வந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அரசுசாரா நிறுவனங்களுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என தெரிவித்தார்.
 

Share this story