குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது : தமிழக போக்குவரத்துத் துறை அறிவிப்பு

bus4

தற்போது, தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரைக் கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவித்துள்ளார்.

தற்போது, தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது. 

இந்நிலையில், இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது, அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சில குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story