வாலிபர்களிடம் பணம் பறிக்கும் வடமாநில அழகிகள் : ஓர் எச்சரிக்கை..

By 
sexyw

நடுத்தர வயதை தொட்ட ஒருவர் செல்போனில் இளம்பெண்ணுடன் சாட்டிங் செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார் என்கிறார்கள் சைபர் கிரைம் போலீசார்.

ஹலோ... என்று பேச தொடங்கிய அறிமுகம் இல்லாத அந்த பெண்ணுடன் எதிர் முனையில் இருந்த அந்த நபர் 'ஹாய்' சொல்லி பேச தொடங்கினார். தொடர்ந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எந்த ஊர்? என்று கேட்டு பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென அப்பெண் வாட்ஸ் அப் வீடியோ காலில் வாங்க என்ஜாய் பண்ணலாம் என்றதும் ஆசையில் அந்த நபரும் வீடியோ கால் செய்துள்ளார்.

எதிர்முனையில் அவர் கண்ட காட்சி தூக்கி வாரி போட செய்துள்ளது. வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்த பெண் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் காட்சி அளித்துள்ளார். இதை பார்த்து நடுத்தர வயதுடைய நபர் ஆடிப்போனார். ஆனால் ஆசை யாரை விட்டது. நொடிப்பொழுதில் அவரும் பிறந்த மேனிக்கு செல்ல... சில நிமிடங்கள் எதிர்முனையில் காட்சி தந்த பெண்ணை ரசித்துள்ளார்.

அப்போது போன் இணைப்பு துண்டிக்கப்பட... அடுத்த நொடியே நடுத்தர வயதுக்காரர் செல்போனுக்கு அவரது ஆடையில்லாத போட்டோக்கள் வந்து விழுந்துள்ளன. இதை பார்த்ததும் 'ஐயோ... மானம் போச்சே... என்ன செய்ய... என்று பதறி கொண்டிருக்கும் போதே போன் வருகிறது. நீ... செல்போனில் வீடியோ காலில் பெண்ணை ரசித்ததை படமாக்கி வைத்துள்ளோம்.

நாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பாவிட்டால் மானம் போய் விடும். உனது உறவினர்கள், நண்பர்களின் செல்போனுக்கு போட்டோவை அனுப்பி விடுவோம் என்று எதிர்முனையில் ஒலித்த மிரட்டல் குரலால் மிரண்டு போன நடுத்தர வயதுக்காரர் லட்சங்களை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஒரு உதாரணம் தான்.

ஒவ்வொரு நாளும் இதுபோன்ற 'செக்ஸ்' மோசடி கும்பல் பலரையும் தங்களது வலையில் வீழ்த்தி பணம் பறித்துக்கொண்டேதான் இருக்கிறது. இதனை வெளியில் சொன்னால் மானம் போய் விடுமே என்று பயந்து பலர் வெளியில் சொல்வதே இல்லை. இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பணம் பறிக்கும் செயல்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.

எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடம் சிக்காமல் இருக்க மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி ஒருவர். இது தொடர்பாக அவர் கூறும்போது, நமது ஆசையை தூண்டிவிட்டு பணம் பறிக்கும் மோசடியான செயல்களில் இதுவும் ஒன்று. வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டோ... குழுவாக செயல்பட்டு பெண்களை பேச வைத்து ஏமாற்றுவார்கள்.

பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் போன் நம்பரை எடுத்து தொடர்பு கொள்வார்கள். சென்னையில் மட்டும் நாள்தோறும் இந்த மோசடி வலையில் பலர் சிக்குகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 4 பேர் மட்டுமே தைரியமாக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக சைபர் கிரைமில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஒரு நபர் மட்டும் ரூ.17 லட்சத்தை இழந்திருக்கிறார்.

எனவே அறிமுகம் இல்லாத பெண்களிடம் இருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று ஏமாற வேண்டாம் என்றும் அந்த அதிகாரி கேட்டுக்கொண்டார். இப்படி மோசடியாக பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் வட மாநில அழகிகளை இதற்காக பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம், டெல்லி, குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்தே இந்த செக்ஸ் மோசடி கும்பல் அதிகமாக கைவரிசை காட்டி வருகிறது. இதுபோன்ற மோசடி கும்பலை பிடிப்பது என்பது கடினமான காரியமாகவே இருந்து வருகிறது.

எனவே ஏமாற்று பேர் வழிகளிடம் சிக்காமல் இருந்தாலே மானம் போகாமல் காக்க முடியும். பணத்தை பறி கொடுத்து விட்டு தவிப்பதையும் தவிர்க்க முடியும் என்கிறார்கள் சைபர் கிரைம் போலீசார்.
 

Share this story