திருப்பதி கோவிலுக்கு ஒன்றரை கோடி ரூபாய் காணிக்கை : முகேஷ் அம்பானி வழங்கினார்

muge

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்தார்.

மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வெங்கடேசப் பெருமானுக்கு நடைபெற்ற ஒரு மணி நேர சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார்.

அவருடன் ரிலையன்ஸ் நிறுவன உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர். வழிபாட்டிற்குப் பிறகு, சன்னதியில் வைத்து காணிக்கையாக ஒன்றரை கோடி ரூபாய்க்கான காசோலையை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கட தர்ம ரெட்டியிடம் முகேஷ் அம்பானி வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து புறப்படும் முன்பு, கோவில் யானைகளுக்கு அவர் உணவு வழங்கியதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

Share this story