அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு : ரயிலுக்கு தீ வைப்பு - பதற்றம் அதிகரிப்பு..
 

akni1

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் போராட்டம் நாளுக்கு நாள் வலுக்கிறது. 

பீகார், மொகியுதிநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். 

பீகார், தும்ரான் ரயில் நிலையத்தில் ரயில் பாதைகளை மறித்து, டயர்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்லியா ரெயில் நிலையத்தில், போராட்டக்காரர்கள் ரயிலை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக செகந்திரபாத் ரயில் நிலையத்திலும் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். பயணிகள் ரயிலை தீ வைத்து எரித்ததுடன் ரயில் நிலைய கடைகளையும் போராட்டக்காரர்கள் சூறையாடி உள்ளனர். 

வடமாநிலங்களை தொடர்ந்து, தென் மாநிலமான தெலுங்கானாவிலும் போராட்டம் பரவி உள்ளது.

Share this story