தனது தாயாரை சந்தித்து, பிரதமர் மோடி உடல் நலம் விசாரிப்பு..

mother2

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் வருகை தந்த பிரதமர் மோடி, மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள தனது தாயாரை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

அவரிடம், ஹீராபென்னின் உடல்நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் விளக்கிக் கூறினர்.

டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, பிரதமர் காந்திநகரில் தனது தாயாரை கடைசியாக சந்தித்தார். ஹீராபென் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்களித்தார்.
 

Share this story