நெதர்லாந்து பிரதமருடன், பிரதமர் மோடி கலந்துரையாடல் : வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

By 
pm

இந்தியாவும் நெதர்லாந்தும் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு, 75-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 

கடந்த 2021 ஏப்ரல் 9 நடைபெற்ற இணையவழி உச்சி மாநாட்டில், இந்திய பிரதமர் மோடியும், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவும் பங்கேற்றனர். 

பின்னர், தொடர்ச்சியாக இரு தலைவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேசி வருகின்றனர். 

தொடர்ச்சியான உயர்நிலை பயணங்கள் மற்றும் கலந்துரையாடல்களுடன் இந்தியா – நெதர்லாந்து உறவுகள் அண்மை ஆண்டுகளில் பிரமாண்டமான வளர்ச்சியை பெற்றுள்ளன. 

இந்நிலையில், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே-யுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசி மூலம் கலந்துரையாடினார்.

இந்தியா – நெதர்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். 

இரு நாடுகள் இடையே வேளாண்மை, உயர்தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. 

இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தியா பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக தகவல்கள் தெரிவித்துள்ளன.
*

Share this story