பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்..

thakanam

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 99), திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்தார். தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைந்தார்.

அங்கு, மறைந்த தனது தாயார் ஹீரா பென்னுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மருத்துவமனையில் இருந்து தாயாரின் உடலை பிரதமர் மோடி சுமந்து சென்றார். ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் சகோதரரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டது.

அங்கு, தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார். இதையடுத்து, இறுதி சடங்கிற்காக மறைந்த ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு, பிரதமர் மோடி இறுதி சடங்குகளை செய்தார். தொடர்ந்து, தனது தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். இதன்மூம் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Share this story