பாலியல் புகாரில் தாளாளர் கைது : தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை

vhj

சென்னை திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் வினோத் என்பவர் அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

பன்னிரண்டாம் வகுப்பில் சரியாக படிக்காத மாணவிகள் சிலரை தனியாக அழைத்து கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி வினோத் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

இதனால் அப்பகுதியே போராட்டக் களமாக காட்சி அளித்தது. போராட்டம் காரணமாக மூன்று காவல் உதவி ஆணையர்கள், 4 ஆய்வாளர்கள், 10-க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், 30-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் சென்னை திருநின்றவூர் தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் புகாரில் பள்ளி தாளாளர் கைதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெறும் தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

Share this story