அரவிந்தர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் : அமித்ஷா

arav

குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில், அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுவைக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வந்தார். தொடர்ந்து, 

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது :

அரவிந்தருக்கும், குஜராத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. 

குஜராத்தை சேர்ந்தவன் என்ற முறையில் அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். நாட்டின் விடுதலைக்காக லட்சக்கணக்கானோர் தியாகம் செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் குறிப்பட்டிருந்தார்.

Share this story