மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு..

exam4

* தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2022 - 2023ம் கல்வியாண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 13.03.2023 தொடங்கி, 03.4.2023 வரை நடைபெறவுள்ளது.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 -ந்தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கான 3 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் போதிய இட வசதிகள், கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் தாங்கள் பாதிக்கப்படுவதாக மாணவிகள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மாணவிகளின் விடுதிகளில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததாகவும், அதன் வழியாக மர்மநபர்கள் இரவு நேரத்தில் உள்புகுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

இந்நிலையில் சித்த மருத்துவ மாணவ-மாணவிகள் இன்று கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் 

Share this story