முன்னாள் முதலமைச்சருடன் ரஜினி திடீர் சந்திப்பு..

jailor

நடிகர் ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

இதனிடையே, ஜெயிலர் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நீண்ட நாட்களுக்கு பிறகு என் அருமை நண்பர் மரியாதைக்குரிய சந்திரபாபு நாயுடுவுடன் மறக்கமுடியாத நேரத்தை கழித்தேன். அவருக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கவும் அரசியல் வாழ்க்கையில் சிறந்து விளங்கவும் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Share this story