ராமர் பாலம், தேசிய சின்னமாகிறது..
 

ramar bridge

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணிய சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்தது.

சுப்பிரமணிய சுவாமி தரப்பில் கூறும்போது, ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இழுத்தடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றனர்.

இவ்வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த பதிலை ஏற்று ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரப்படும் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் மத்திய அரசு எடுக்கும் முடிவில் நிவாரணம் தேவையென்றால் மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை நாட நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.

Share this story