17,000 ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை..

monthly

புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வறுமைக்கோட்டுக்கு கீழ் அரசு திட்டங்களில் எந்த நிதியுதவியும் பெறாத ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

பொங்கல் பண்டிகைக்குள் இந்த மாத உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இதற்கான கோப்பு கவர்னர் தமிழிசையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. கவர்னர் தமிழிசை இந்த கோப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தகவலை கவர்னர் தமிழிசை உறுதி செய்தார். இதை அரசாணையாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு சில நாட்களே இருந்தாலும் இத்திட்டத்தை உடனடியாக தொடங்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த தகவலை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தெரிவித்தார்.

அரசின் மாத உதவித்தொகை பெறாத ஏழை பெண்கள் 17 ஆயிரம் பேரை கண்டறிந்துள்ளோம். இவர்களுக்கு அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் மாத உதவித்தொகையாக ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து அரசின் உதவி பெறாத பெண் பயனாளிகளை கண்டறியும் பணி நடந்து வருகிறது.

அதிகபட்சம் 40 ஆயிரம் ஏழை பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு இத்திட்டத்தை தொடங்கிவைக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story