53 செயற்கைக் கோள்களை ஸ்பேஸ் நிறுவனம், விண்ணில் செலுத்தியது..
 

By 
spac

அதிவேக இணைய சேவைக்காக 53 செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக, ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 

இதற்காக, தலா 260 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தொடர்ச்சியாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

அப்படி இதுவரை பல்வேறு கட்டங்களாக 2 ஆயிரத்துக்கும் அதிகமான செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி, வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
*

Share this story