அரசு பள்ளிகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை : சென்னை மேயர் தகவல்
 

mayor priya

சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்தில் உள்ள 15 முதல் 22- வது வார்டு வரை நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மண்டல அலுவலகத்தில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. 

துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன் தீப்சிங்பேடி வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன். எம்.எல். ஏக்கள் மாதவரம் சுதர்சனம்,கே.பி. சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் அதிகாரிகள் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் மேயர், செய்தியாளர்களிடம் கூறியதாவது :

ஒவ்வொரு மண்டல அலுவலகத்திலும் வெள்ளிக்கிழமையன்று மாமன்ற உறுப்பினர்களின் சார்பாக கூட்டம் நடைபெற்று வருகிறது அதேபோன்று மணலி மண்டலம் 2 ல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், ஒவ்வொரு மாவட்ட உறுப்பினர்களும் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை எடுத்துக் கூற முடியும். 

மாமன்ற உறுப்பினர்கள் கூறக்கூடிய குறைகளுக்கு உடனடி தீர்வு கிடைப்பதற்கான வழிவகைகள் செய்யப்படும். 

மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சியோடு இணைத்து பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டதின் அடிப்படையில், 

கல்வித்துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காணப்படும். 

இன்னும் ஒரு வருட காலத்திற்குள் விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சி வார்டு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை, மாநகராட்சியிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
*

Share this story