மாணவ-மாணவியர் உலகம் : குரூப் எக்ஸாம் தேர்வு முடிவு வெளியீடு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

By 
tnpsc5

* தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 5,413 பணியிடங்களுக்கான குரூப் -2 குரூப்-2 ஏ முதல் நிலை தேர்வுகள் கடந்த மேமாதம் 21-ம் தேதி நடைபெற்றது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.

இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. http://tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

குரூப் -2 பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 25-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* திருத்தணி காந்தி ரோட்டில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு திருத்தணி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் சில மாணவர்கள் வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வகுப்புக்கு செல்லாமல் ரெயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பூங்கா ஆகிய இடங்களில் ஜாலியாக சுற்றித் வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளியில் பிளஸ்- 1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் 3 பேர் திருத்தணி மலைக் கோவிலில் சுற்றி திரிந்தனர். அப்போது மலைக்கோவிலில் தீ தடுப்பு ஒத்திகை நடத்த வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அந்த மாணவர்களிடம் விசாரித்தார். அவர்கள் வகுப்புக்கு செல்லாமல் சுற்றிதிரிந்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் 3 பேருக்கும் 15 முறை தோப்புகரணம் போடும்படி நூதன தண்டனை கொடுக்கப்பட்டது. ஒருவர் காதை மற்றொருவர் பிடித்தபடி அவர்கள் தோப்புகரணம் போட்டனர்.

மேலும் இனிமேல் பள்ளிக்கு ஓழுங்காக செல்வேன் என்றும் அவர்கள் உறுதி மொழி எடுத்தனர். பின்னர் மாணவர்கள் 3 பே ரையும் தீயணைப்பு அலுவலர் பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த நூதன தண்டனையை கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் பார்த்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும் இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

Share this story