பள்ளியில் மாணவர்கள் மோதல் : ஒருவர் பலி-3 பேர் கைது..
 

stu1

நெல்லை மாவட்டம், முக்கூடல் அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவர் செல்வ சூர்யாவுக்கும் 11-ம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. 

வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 

அப்போது, செல்வ சூர்யாவை எதிர்தரப்பை சேர்ந்த 3 மாணவர்கள் கற்களால் தலையில் பலமாக தாக்கி உள்ளனர். 

இதில், பலத்த காயமடைந்த செல்வ சூர்யா, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே கோஷ்டி மோதல் தொடர்பாக 11-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்த நிலையில், தற்போது அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. 

தீவிர விசாரணைக்கு பிறகு மாணவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் காரணமாக பாப்பாக்குடி, பள்ளக்கால் புதுக்குடி, இடைகால் உள்ளிட்ட இடங்களில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரான்சிஸ், பொன்னரசு ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜ குமாரி, சந்திரமோகன் ஆகியோரின் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
*

Share this story