'தாம்பரம்-வேளச்சேரி' புதிய மேம்பாலம் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
 

thamparam

மேடவாக்கம் பகுதியில், தாம்பரம் - வேளச்சேரி மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் - வேளச்சேரி இடையே நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தாம்பரம் - வேளச்சேரி இடையே மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். 

அதன் பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் மேம்பாலத்தில் காரில் பயணம் செய்தார்.

2.03 கி.மீ நீளமும் 11 மீ அகலமும் கொண்ட மேடவாக்கம் மேம்பாலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தற்போதைய பாலங்களில் மிக நீளமான மேம்பாலம் என கூறப்படுகிறது.
*

Share this story