தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மறைவு : பிரதமர் மோடி-முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By 
deena

83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள, தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18) மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது, எதிரே வந்த லாரி மோதி, கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 

காரில் இருந்த மற்ற 3 பேர் படுகாயமடைந்தனர். தீனதயாளனின் உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. 

பிரதமர் மோடி இரங்கல் :

இந்நிலையில், விஸ்வா தீனதயாளனின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிரதமர் மோடி கூறியதாவது :
 
டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. 

அவர், மற்ற வீரர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். பல போட்டிகளில் தன் தனித்திறமையை நிரூபித்தவர். 

இந்த சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இருக்கும். ஓம் சாந்தி.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் :

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில்:

“எங்கள் இளம்,நம்பிக்கைக்குரிய டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளனின் இதயத்தை உடைக்கும் அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சியுற்றேன்.அவர் ஒரு லெஜண்ட்-மேக்கிங்,அவர் மிக விரைவில் எங்களை விட்டு பிரிந்தது எனக்கு வேதனை அளிக்கிறது.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் விளையாட்டு சகோதரத்துவத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று முதலமைச்சர் பதிவிட்டுள்ளார்.

Share this story