தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்

ttt

தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 
 
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்' என தெரிவித்துள்ளது.
*

Share this story