காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் :1,800 ராணுவ வீரர்கள் குவிப்பு

By 
kashmir

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதாக பா.ஜ.க. உறுதியளித்த நிலையில், பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டது என காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதற்கிடையே, கடந்த சில வாரங்களாக காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி ஆகிய மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்த தாக்குதல்களில் நமது வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்கள், குழந்தைகள் பலியாகினர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள மத்திய ரிசர்வ் படைப்பிரிவு போலீசார் 1,800 பேர் காஷ்மீரின் பூஞ்ச், மற்றும் ரஜோரி, அப்பர் தான்கிர ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Share this story