நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த உத்தரவு விவகாரம்..  

vijay2

நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புலி படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய சம்பளத்தில் ரூ.15 கோடி மறைத்ததாக அவர் மீது வருமான வரித்துறை ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது. அதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதையடுத்து நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. மேலும் வழக்கு தொடர்பாக செப்டம்பர் 16-ம் தேதிக்குள் பதிலளிக்க வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இடைக்காலத் தடையை அக்டோபர் 26 வரை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 

Share this story