இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் : மத்திய அரசு தகவல்
 

By 
bharati

ஜூலை 18-ம் தேதி நிலவரப்படி தகுதியான 4 கோடி பயனாளிகள் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட செலுத்திக்கொள்ளவில்லை என்று சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் தெரிவித்துள்ளார். 

ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக்கொள்ளதவர்களின் எண்ணிக்கை மற்றும் சதவீதம் குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். 

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பயனாளிகளுக்கும் இந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதல் இலவச தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. 

18- 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி முதல் தனியார் மையங்களிலும் செலுத்தப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், 

'இந்தியாவில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களில் 98 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸையாவது பெற்றுள்ளனர். 

அதே நேரத்தில் 90 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
*

Share this story